2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடியில் சமய நல்லிணக்க கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஜூலை 16 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் சமயங்களுக்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்ததையும் ஏற்படுத்தும் வகையிலான சமய நல்லிணக்க கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை  காத்தான்குடி, முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூக விங்ஞானிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மௌலவி யு.எல்.எச்.எம்.மக்கீ தலைமையில்  நடைபெற்ற இக் கலந்துரையாடலில் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவர் வஜிரதேரோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்மாகாண சபையின் தற்பேதைய உறுப்பினருமான வத்தேகம தேரோ, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, அஷ்ஷெய்க எம்.பி.எம்.பிர்தௌஸ் நழிமீ, சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சித் பெரேரா, வைகுந்த ராஜா குருக்கள், அருட் தந்தை டொமினிக் சுவாமிநாதன் உட்பட சமய தலைவர் மற்றும் சமூக மட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த 30க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடல்களில் இன நல்லினக்கம், மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை, யுத்தத்துக்குப் பின்னரான சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, இன நல்லுறவு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .