2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பாராட்டு வைபவம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் டுபாய் நாடுகளுக்கான இலங்கை கொன்சலர் ஜெனரலாக கடமையாற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எம்.அப்துர் றஹீம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் காரியாலயத்தில் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் டுபாய் நாடுகளுக்கான இலங்கை கொன்சலர் ஜெனரல் எம்.எம்.அப்துர் றஹீம், சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி, சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உட்பட சம்மேளன முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மேற்படி கொன்சலர் ஜெனரல் றஹீமை, சம்மேளன பிரதித் தலைவர் சட்டத்தரணி ஜவாத் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .