2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை புதுக்குடியிருப்பு கலை வாணி கலாமன்ற வளாகத்தில் இடம்பெறறது.

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மு.கோனேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

மாதர் சங்கத் தலைவி திருமதி.சந்திரவல்லி ரவீந்திரன், கிராம அபிவிருத்திச் சங்க பொருலாளர் த.மோகனராஜா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஐந்து இலட்சம் ரூபாயை இக்கட்டிட நிர்மாண பணிகளுக்காக ஒதுக்கியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .