2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பெண்களுக்கெதிரான வன்முறைக்கான ஒருமில்லியன் பிரசார ஆரம்பிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


தெற்காசிய பெண்ணுரிமைக்கான அமைப்பின் தலைவி கமலா பாசினுடனான கலந்துரையாடலும், பெண்களுக்கெதிரான வன்முறையினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மில்லியன் பிரசாரத்திட்ட ஆரம்பிப்பும் நேற்று மட்டக்களப்பு ரீட் ஊ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இந்தியாவிலிருந்து வருகை தந்த பெண்கள் செயற்பாட்டாளர் கமலா பாசின் மற்றும் பேராசிரியை க சித்திரலேகா மௌனகுரு  கலந்துகொண்டனர்.

இதன்போது, சூரியா பெண்கள் அமைப்பின் கலாசார குழுவினரால் இயற்றப்பட்ட சூரியாவின் பெண்கள் குரல் பாடல் இசைக்கப்பட்டு, ஒரு மில்லியன் பிரச்சாரத்துக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்வில், பெண்கள் உலகளவில் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள், அதன் தீர்வுகள், மற்றும் எதிர்காலச் செயற்திட்டங்கள், தெற்காசிய பெண்கள் வலையமைப்பில் உள்ள சங்கத்தினர் நடைமுறைப்படுத்திவரும் பெண்களுக்கெதிரான வன்முறையினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மில்லியன் பிரச்சாரத்திட்டம் பற்றிய விளக்கங்களை கமலா பாஸ் வழங்கினார்.

இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் டாக்டர் கடம்பநாதன், மட்டக்களப்பு பெண்கள் மேம்பாட்டு நிறுவன பணிப்பாளர் திருமதி சள்மா ஹம்சா, மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு பொறுப்பாளர், உட்பட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .