2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கபேயின் கண்காணிப்பு அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2012 ஜூலை 23 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா, எம்.சுக்ரி)

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தனது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைளுக்கான கண்காணிப்பு அலுவலகத்தினை இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் உத்தியாக பூர்வமாக திறந்து வைத்தது.

மட்டக்களப்பு மன்றேசா வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்க கட்டிடத் தொகுதியில் இவ் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வலுவலக திறப்பு விழாவில் மட்டக்களப்பு சிவில் அமைப்பின் தலைவர் டொக்டர் வி.பிறேமகுமார், மட்டக்களப்பு வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.மாமாங்கராஜா, மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத் தலைவர் ரஞ்சிதமூர்த்தி, எகட் நிறுவனத்தின் பணிப்பாளர் கிறைட்டன்செலர், கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஹபீப் றிபான், கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ.மனாஸ், கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பளர் கீர்தி தென்னக்கோன், இணைப்பாளர் ஏ.எச்.ஏ.குசைன் மற்றும் கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களான சல்மாகம்சா (முஸ்லிம்காங்கிரஸ்), தங்கேஸ்வரி (சுயேட்சைக்குழு), சபீக்கா (ஐக்கிய தேசியக் கட்சி), ருத்திரமலர்(ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) ஆகியோர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .