2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தமிழ் இனத்தின் இருப்பை நிலையப்படுத்தவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்: பிரசாந்தன்

Kogilavani   / 2012 ஜூலை 23 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
'எம் தமிழ் இனத்தின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்பதற்காகவே ஆளும் அரசாங்கத்துடன் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்' என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்று காலை கருத்து வெளியிட்ட பிரசாந்தன் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகுச் சின்னம் எங்கே ? வெற்றிலைச் சின்னம் எம் தமிழர்களின் எதிரி எனவும் அதனால் நாம் வாக்களிக்க மாட்டோம் என பல தமிழர்கள் கூறுவார்கள். இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கவில்லையா? அவரது சின்னம் என்ன வீடா? இல்லையே அவரது சின்னம் அன்னம்.

அதற்கு அப்போது, ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். அதற்கு வாக்களிக்க இயலும் என்றால் ஏன் வெற்றிலைக்கு வாக்களிக்க முடியாது. அதிகூடியளவில் தமிழர் கொலைகளும், பல சூட்சுமங்களும் செய்த ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கவில்லையா? சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்டு ஆதரவு தெரிவிக்கவில்லையா?
இவ்வாறான துரோகத்தனங்களை புரிந்துவிட்டு இன்று கிழக்கில் தமிழரின் ஆட்சியினை இல்லாதாக்க முனைவது ஏன்? என்ற கேள்விக்கு மத்தியில், எது எவ்வாறு இருப்பினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினை இன்னும் தசாப்த காலத்திற்கு மேல் யாராலும் மாற்ற முடியாது.

கிழக்கிலும் ஆட்சியமைக்கப் போவது ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி தான். அத்தோடு தமிழர்கள் தனித்து ஆட்சியமைக்க முடியுமா என்றால் இல்லை. ஆளும் அரசுடன் இணைந்தால் மாத்திரமே ஆட்சியமைக்க முடியும்.

மாறாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால் எதனையும் செய்ய முடியுமா? இல்லை. நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் 5 வருடத்தில்  எம் பரம்பரை கொட்டாவி மட்டும் தான் விட முடியும். இதனைத் தடுத்து ஆளும் அரசில் அதிக ஆசனங்களைப் பெறுமிடத்தே ஆட்சியினையும் பிடித்து உரிமை, அபிவிருத்தி என்று பேரம் பேசவும் முடியும். எம் தமிழ் இனத்தின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்பதற்காகவே ஆளும் அரசுடன் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்" எனவும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Iya Monday, 23 July 2012 01:14 PM

    நீங்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது தமிழ் பிரதினிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு. கடந்தலால வரலாறு எங்களுக்கு கற்றுத்தந்த பாடம் இது. கடந்த காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைந்ததுக்கு தமிழர்கள் வெற்றிலையில் போட்டியிட்டதுதான் காரணம். இம்முறை அனைத்து தமிழ் மக்களும் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கலாம். உங்கள் சுயநலத்துக்காக தயவு செய்து தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .