2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வீதியை கடக்க முற்பட்டவர் மீது வாகனம் மோதி பலி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 24 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, லோஹித், ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை வீதியை கடக்க முற்பட்ட ஒருவரின் மீது விமானப்படையினரின் வாகனம் மோதியதில் அவர் பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பிரதான வீதியிலுள்ள கல்லடி இராமகிருஷ்ணமிஷனுக்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தின்போது, பூநொச்சிமுனையை சேர்ந்த 50 வயதான ஒருவரே  பலியானவராவரெனவும் பொலிஸார் கூறினர். 

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .