2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

கல்குடா தொகுதி வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்

Super User   / 2012 ஜூலை 25 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக கல்குடா தொகுதியிலுள்ள வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர்கூடத்தில் உதவி பொலிஸ் மாஅதிபர் ஏ. ரவீந்திர வைத்தியலங்கார தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்காவினால் தேர்தல் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வாழைச்சேனை, ஏறாவூர், கல்குடா, வாகரை, கரடியணாறு மற்றும் ஆயித்திமலை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் அதிகாரிகளும், அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 416 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பிரதான பிரச்சார காரியாலயமும் வேட்பாளர் ஒருவருக்கு ஒரு காரியாலயமும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .