2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம்களின் வாக்கு முஸ்லிம்காங்கிரஸுக்கு என்பதை நிரூபிக்க தனித்து போட்டி: ஸ்ரீ.மு.கா. வேட்பாளர்

Kogilavani   / 2012 ஜூலை 27 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

நடைபெறப் போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு முஸ்லிம் காங்கிரஸுக்கே உள்ளது என்பதை நிருபித்துக் காட்டுவதற்காகவே தனித்துப் போட்டியிடுகிறோம் என்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் எஸ்.ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கல்குடாத் தொகுதியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்  ஓட்டமாவடியில்  பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கல்குடாத் தொகுதி முஸ்லிம் வாக்காளர்கள் காலம் காலமாக முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று வாக்களித்தவர்கள். முஸ்லிம் காங்கிரஸ் மூலம்தான் இப் பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான வரலாறுகள் உள்ளன.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோஷத்திற்காகவே இப் பிரதேசத்தில் இருந்து மாற்றுக் கட்சிகளுக்கு வாக்குகள் அழிக்கப்பட்டதே தவிர அவ் வாக்குகள் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் அல்ல என்றும் கூறினார்.

இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான எம்.எம்.எம்.ராசிக், எம்.எச்.எஸ்.இஸ்மாயில், முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் எம்.பி.எம்.ஹுஸைன், ரஸீட் ஆகியோர் உரையாற்றினர்.




  Comments - 0

  • abdul hafeel Monday, 30 July 2012 04:14 PM

    இன்சா அல்லாஹ் நீங்கள் சொல்வது நிறைவேறும். அல்லாஹு அக்பர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .