2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மாவட்ட செயலகத்தில் தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம்

Kogilavani   / 2012 ஜூலை 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் செயலகத்தில் தேர்தல் முறைப்பாடுகளைத் தெரிவித்துக் கொள்ள விசேட தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம் கடந்த திங்கட்கிழமை ஜுலை 23 ஆம் திகதி தொடக்கம் இது இயங்கி வருவதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார்.
ஆயினும் தமக்கு நேரடியாக இதுவரை எதுவிதமான முறைப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளும், மாவட்டச் செயலக அதிகாரிகளும், தேர்தல் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் கடமையாற்றுகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் 0653063134, பெக்ஸ் இலக்கம் 0652222188,

இதற்கு மேலதிகமாக தேர்தல் திணைக்களத்திலும் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு நிலையம் தொலைபேசி இலக்கம் 0112877620, பெக்ஸ் 0112877621 தேர்தல் திணைக்களத்தின் பொலிஸ் இணைப்புப் பிரிவின் தொலைபேசி இலக்கம் 0112877622 பெக்ஸ் இலக்கம் 0112877623. 

இந்த தடவை விசேடமாக தேர்தல் ஆணையாளரிடம் 'ரெல் கொமிசன்' மூலமாகவும் நேரடியாக முறைப்பாடுகளைச் செய்ய முடியும். தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளமான comslelect.sltnet.lk சென்று உங்களது முறைப்பாட்டை எழுதி www.slelection.gov.lk இங்கு முறைப்பாடு செய்தால் 15 தொடக்கம் 20 நிமிடங்களுக்குள் முறைப்பாட்டாளருக்கு பதில் கிடைக்கும் என்று தேர்தல்கள் பிரதி ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

ஆர்வமுடையோர் பொலிஸ் திணைக்களத்திற்கும் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.

இது தவிர சுதந்திரமானதும் நீதியானதமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் 'கபே' தேர்தல் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதமான தேர்தல் நடவடிக்கைகள் பற்றி அறிவிக்குமாறு கேட்டுள்ளது.

அதன் அவசர தொலைபேசி இலக்கம் 0114341524 பெக்ஸ் இலக்கம் 0112866224 எனும் தொடர்பு இலக்கங்களுடனோ அல்லது கபே அமைப்பின் இல 599, திருமலை வீதியிலுள்ள மட்டக்களப்பு மாவட்டக் கண்காணிப்பு அலுவலகத்திற்கோ முறையிடலாம் என்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .