2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம்

Super User   / 2012 ஜூலை 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிpயின் வேட்பாhள்களை சந்தித்து கலந்துரையாடினார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளவுள்ள பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க கொழும்பு மாநகர சபை மேயர் எ.ஜே.எம்.முஸம்மில், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .