2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு கறுவப்பங்கேணியில் மகளிர் சங்கங்களின் ஏற்பாட்டில் பிரசாரக் கூட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரிலோஹித்)

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரனை ஆதரித்து மட்டக்களப்பு, கறுவப்பங்கேணியில் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.

இருதயபுரம், கறுவப்பங்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர் சங்கங்கள் இணைந்து இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தினை நடத்தினர்.

இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வேட்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தேர்தலில் தான் வெற்றிபெறும் இடத்து மேற்கொள்ளவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் வேட்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் விளக்கமளித்தார்.

அத்துடன் இந்த தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும் இது தொடர்பில் மக்களின் பங்களிப்பு தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிறப்பு உரையாற்றினார்.

இதேபோன்று மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளரான பொன்.ரவீந்திரனும் உரையாற்றினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .