2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாவட்ட ஜே.வி.பி வேட்பாளர் அறிமுக நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு மட்டக்களப்புகல்லடி றிவேரா ஹோட்டலில் இடம்பெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துநெத்தி மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மணிச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் தற்போதையநிலை மற்றும் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .