2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

உன்னிச்சை குளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சைகுளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காந்தி கிராமம் சின்ன ஊறணியை சேர்ந்த கலாவள்ளி பிரதீபன் (24வயது), அம்மன் கோவில் வீதி, இருதயபுரத்தை சேர்ந்த ஜி.பிரியதர்ஷன் (27 வயது) ஆகியோரே உயிரிழந்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் நண்பர்கள் எனவும் உல்லாசமாக சென்று குளித்துக்கொண்டிருந்தபோது சுழியில் சிக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .