2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் கல் வீச்சு

Super User   / 2012 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பரசுராமன் சிவநேசனுடைய வீட்டிற்கு இனந்தெரியாதவர்களினால் கல் வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் புச்சாங்கேணி சுனாமி வீட்டுத் திட்டத்திலுள்ள இவருடைய வீட்டின் மீதே இத்தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

கூட்டமைப்பு வேட்பாளர் பிரச்சார பணிகளை நிறைவு செய்து விட்டு வீட்டிற்கு வந்து ஓய்வொடுத்து கொண்டிருந்த பொழுதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வந்த இருவர் இவரது வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இதனால் மின்குமிழ்கள் யன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தமது ஆதராவாளர்கள் தூரத்திச் சென்றபொழுது இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .