2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.

கல்விக்கான நிதியொதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமெனும் கோரிக்கையை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தேசிய கல்விக்கொள்கையை உடன் அமுல் படுத்த வேண்டும், பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருக்க கூடாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் தாங்கயிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .