2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Super User   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரொருவரின் வீடு இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் அலியார் நஷீரின் ஏறாவூர் இல்லமே இன்று செவ்வாய்;ககிழமை  அதிகாலையில் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுதுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் ஹாபிஸ் நசீர் அஹமட்; தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏறாவூர்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியின்றி பிரசார முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியுடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .