2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வாகன விபத்தில் ஹோமியோபதி வைத்தியர் பலி

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 64 வயது எஸ். சிவகிரிநாதன் என்ற ஹோமியோபதி வைத்தியரே குறித்த விபத்தில் பலியாகியவராவர்.

இவர் செங்கலடியிலுள்ள தனது இல்லத்திலிருந்து சந்திவெளியிலுள்ள ஹோமியோபதி வைத்தியமனைக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.

பிரதான நெடுஞ்சாலையிலிருந்து இவர் சடுதியாக திரும்பிய போது பிக்கப் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்துக் காரணமாக மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம் சம்பவித்ததாக சட்ட வைத்திய அதிகாரி எம்.எம்.எம். றஹுமானின் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதிய வாகனம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .