2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கடல் ஆமைகளை விற்பனை செய்தவர்கள் கைது

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் கடல் ஆமைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு இவர்களை கைதுசெய்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்னவின் ஆலோசனையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கிங்ஸ்லி குணரெட்னவின் வழிகாட்டலின் கீழ் சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜெயசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

கடலில் மிகவும் அருகிவரும் உயிரினமாகவுள்ள இந்த கடலாமைகளை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றை பிடித்து விற்பனைசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரி உட்பட மூவர் அடங்கிய குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 120 கிலோ பெறுமதியுடைய கடலாமைகள் மற்றும் அவற்றினை பிடிப்பதற்கு விற்பனைசெய்வதற்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றாடல் பிரிவு பொலிஸாரால் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையை தடுக்கும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எம்.ஜெயசுந்தர தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .