2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'முறன்பாடுகளற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் அரசியல் தலைவர்களின் பங்கு' செயலமர்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

'முறன்பாடுகளற்ற அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் சிவல் சமூகத்தினருடன் இணைந்ததான அரசியல் தலைவர்களின் பெறுமதியான பங்களிப்பு' எனும் தலைப்பிலான செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் நீதியானதும் சுதந்திரமானதுமான மக்கள் இயக்கமான கபே நிறுவனத்தின் அனுசரணையுடன் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.

மட்டக்களப்ப மாவட்ட சிவில் சமூகத்தின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளருமான கலாநிதி எம்.பிறேம்குமார் தலைமயில் நடைபெற்ற இச் செயலமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், மற்றும் கபே நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் அதன் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.மனாஸ், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எச்.எம்.ஹுஸைன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சமய பிரமுகர்களின் ஆசியுரையும் கிழக்கு மாகாண சபை தேர்தலை வன்முறையற்ற தேர்தலாக நடத்துவதற்கான ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்பட்டதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களி;ன் வேட்பாளர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களையும் வழங்கினர்.

கிழக்கு மாகாண சபை தேர்தலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்முறையற்ற தேர்தலாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக இதன்போது உறுதியளித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .