2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் ஈரோஸ் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                      (ஜிப்ரான்,ரி.லோஹித்)


மட்டக்களப்பு, பூம்புகார் பகுதியில் உள்ள  ஈரோஸ் கட்சி அலுவலகத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால்  பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஈரோஸ் தலைவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தலைமை வேட்பாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான இரா.பிரபாகரனின் வாகனம் அலுவலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தலைமை வேட்பாளர் பிரபாகரன் அலுவலகத்தில் இருந்தபோதிலும், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக இரா.பிரபாகரன் தெரிவித்தார்.  தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.இது தொடர்பில் பொலிஸிலும் தேர்தல் கண்காணிப்புக்குழுக்களிடமும் பல தடவைகள் முறையிட்டபோதும், இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இங்கு ஜனநாயக ரீதியான, சுதந்திரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரப்படவேண்டும்.அவ்வாறான நிலை இல்லை என்றால் தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாகிவிடும் எனவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .