2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் மக்களின் உயிர்நாடிப் பிரச்சினை: வேட்பாளர் மனோகரராசா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கிழக்கு மாகாணசபைத் தேர்தலானது தமிழ் மக்களின் உயிர்நாடியான பிரச்சினை. இவற்றில் தமிழினம் தவறுவிடுமேயானால் அது தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பான விடயமாக மாறும் என கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்  த.மனோகரராசா(செல்வா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, சேற்றுக்குடாவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினாக்
புளொட் அமைப்பின்  செயலாளர் நாயகம் சித்தார்த்தன் இந்த சந்திப்பில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த காலங்களில் தமிழினம் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் கடுமையான பாதிப்புக்களை எமது மக்கள் எதிர்கொண்டனர். இன்று அந்த பாதிப்புக்களில் துப்பாக்கிகளின் பாதிப்புக்கள் ஓய்ந்தாலும் அடாவடித்தனங்களும் மக்களின் நில ஆக்கிரமிப்புக்களும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

கடந்த காலங்களில் எமது கிழக்கு மாகாணத்தை ஆட்சிசெய்தவர்கள் எமது மக்களுக்கு எதனை செய்துள்ளார்கள் என்பதை சிந்திக்கவேண்டும். இன்று கிழக்கு மாகாணத்தின் பலத்த சவாலாக இருப்பது தமிழ் மக்களின் வாக்களிப்பாகும். எமது இனம் இன்று அரசியல் ரீதியாக சிந்திப்பது மிகவும் குறைந்த நிலையில் இருப்பது கவலை அளிக்கின்றது.

எமது சகோதர இனத்தை நாங்கள் நோக்கவேண்டும். அவர்களது வாக்களிப்பு வீதம் கடந்த காலத்தில் அதிகரித்துச்செல்வதன் காரணமாகவே அவர்களது பிரதிநிதித்துவம் அதிகரித்து  உள்ளது.

நாங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று எமது உரிமைகளை பயன்படுத்தவேண்டும். இந்தமுறை நடைபெற இருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் மக்களின் தலைவிதி. இதில் நாங்கள் பிழைவிடுவோமேயானால் எமது எமது சமூகம் பாரிய ஆபத்தை எதிர்நோக்கும்.

கடந்த காலங்களில் ஜனநாயகத்துக்கு திரும்பியுள்ளதாக கூறிக்கொண்டு இன்னும் அவர்கள் தங்களது அடாவடித்தனங்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக தெரியவில்லை. அவர்களை இந்தமுறை எமது மக்கள் தோற்கடிக்கவேண்டும். இந்தமுறை எமது மக்கள் வீட்டுக்கு அதிகளவில் வாக்களிப்பார்கள் என்று தெரிந்துகொண்டு அவற்றை குழப்புவதற்கு பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டுவருகின்றனர். அவற்றின் மூலம் எம்மையும் எமது மக்களையும் குழப்ப நினைக்கின்றனர். இனி ஒருபோதும் அவ்வாறு அவர்களால் செய்யமுடியாது. இன்று மக்கள் தட்டிக்கேட்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். மக்களை இனியும் யாராலும் முட்டாளாக்கமுடியாது. அபிவிருத்தியை பேசி எமது மக்களை ஏமாற்றமுடியாது.

நாங்கள் எமது உரிமையினை பெற்று அபிவிருத்தியடையவேண்டுமானால் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு இந்தமுறை கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றவேண்டும். இதில் மக்கள் புத்திசாதுரியமாக செயற்படுவார்கள் என நம்புகின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .