2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கோயில் திருவிழாவிற்குச் சென்றவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் உன்னிச்சை 8ம் கட்டையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா (40 வயது) கருணாகரனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நேற்று ஞாயிறு மாலை 5 மணிக்கு உன்னிச்சை பிள்ளையார் கோயிலின் வருடாந்த ஆலய உற்சவத்திற்காகச் சென்றிருந்ததாகவும் இன்று காலை கோயிலின் முன்னால் அவர் இருந்தபோது சந்தேகம் கொண்ட உறவினர்கள் அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர்.

அப்பொழுது அவர் இறந்து விட்டிருந்தது தெரியவந்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இவர் ஒரு இருதய நோயாளி என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் மனைவி சடலத்தை அடையாளம் காட்டினார்.

ஆயித்தியமலை வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து வரப்பட்டு மாவட்ட வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை நடத்தினார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாரடைப்பால் மரணம் சம்பவித்ததாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய மேலதிக விசாரணையை ஆயித்தியமலைப்  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .