2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பாலம் நிர்மாணிப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (ஜவீந்திரா)
மட்டக்களப்பு, படுவான்கரை கம்பியாற்றுக்கு குறுக்காக பாலம் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், பொருளாதார அமைச்சர் பசீல் ராஜபக்ஷ, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் அபிவிருத்தி மகளீர் விவகார  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்யுல்லாஹ், கலைக்கப்பட்ட கிழக்கு மாகண சபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இப்பாலம் இன்மை காரணமாக காக்காச்சுவட்டை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, பலாச்சோலை போன்ற பின்தங்கிய கிராம மக்கள் இதுவரை காலமும் வெள்ள அனர்த்த வேளைகளில் தமக்கான போக்குவரத்து சேவையில்; பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதனை கருத்திற்கொண்டு இப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து இப்பிரதேசத்தினை ஊடறுத்துச் செல்லும் வகையில் மேற்படி பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ்; 350 லட்சம் ரூபா செலவில் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • vijayaraja mandur 13 Tuesday, 21 August 2012 02:27 AM

    அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    Reply : 0       0

    sumi kidnapillai Tuesday, 21 August 2012 07:30 AM

    இப்பெருமை கௌரவ அமைச்சர் கருணா அம்மானை சேரும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .