2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பன்சேனை கிராமிய வைத்தியசாலையை அமைச்சர் பஸில் திறந்துவைத்தார்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்சேனையில் மீள் எழுச்சித் திட்டத்தினுடாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கிராமய வைத்தியசாலையை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்ட கிழக்கு மாகாணத் திட்டப் பணிப்பானர் எஸ்.கே.லியனகே தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான பன்சேனையானது, நகரில் இருந்து 50 கிலோ மீற்றர் தலைவில் உள்ள நிலையில் இப்பகுதி மக்கள் பல்வேறு விதத்திலும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்கள் தங்களது சுகாதாரத் தேவையினை பூர்த்தி செய்ய நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்ட கிராமிய வைத்தியசாலை சேதமடைந்து காணப்பட்டதால் மீள் எழுச்சித் திட்டத்தினுடாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

இவ்வைத்தியசாலையினுடாக பன்சேனை, திநகர், தந்தாமலை, பாவற்கொடிச்சேனை மக்கள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திறப்பு விழா நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், வவுணதீவுப் பிரதேச சபை தவிசாளர் கா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .