2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மண்டூர் துறையடி வீதிக்கு கொங்கிறீட் இடும் பணிகள்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் தேசத்துக்கு மகுடத்தின் கீழான வேலைத்திட்டங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது மண்டூர் துறையடி வீதிக்கு கொங்கிறீட் இடும் பணிகளை மீள்குடியேற்றப்  பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துவைத்தார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட துறையடி வீதியில் சுமார் ஒரு கிலோமீற்றர் வீதியானது ஒரு கோடி ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இந்த வீதியை  புனரமைத்துத் தருமாறு மீள்குடியேற்றப் பிரதி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் அதிகாரிகள், பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .