2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மு.கா. தவிசாளரே வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கூறியபின் எதற்காக மரத்திற்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (எம்.சுக்ரி, சிஹாரா லத்தீப்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரே வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியிருக்கும் போது ஏன் இன்னும் மரத்திற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என நான் கேட்க விரும்புகின்றேன் என அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் கூறினார்.

காத்தான்குடியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் றிசாட் பதியுதீன்,

"கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் போட்டியிடுகின்றார். அவரிடம் எந்தவிதமான சமுதாய நோக்கமும் கிடையாது. இந்த முஸ்லிம் சமுதாயம் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்று விடக் கூடாது என்ற சிந்தனையில் ஏதோ ஒரு நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற வகையில் செயற்பட்டு வருகின்றார்.

ஒரு இலட்சம் முஸ்லிம்கள் கலிமா சொன்ன ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்ட சமூகம் இருபது வருடங்களாக பட்ட துன்பங்களும் அவலங்களும் தற்போது பெற்றுள்ள சமதானத்தில் தன்னுடைய சொந்த மண்ணுக்கு செல்லுகின்ற வேளையில் புலிகள் அழிந்தாலும் புலிகளுக்கு  உதவி செய்தவர்கள், புலிகளை வழி நடத்திய சில மதத்தலைவர்கள், புலிகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கியவர்கள் இந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களையும் வடக்கிலே மீளக்குடியேறமால் தடுக்கின்ற பாரிய சதி வடக்கிலே நடந்து கொண்டிருக்கின்றது.

வடபுலத்து முஸ்லிம்களை மீன் குடியேற்றுகின்ற பணியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து கொண்டிருக்கின்ற போது அதற்கு தலைமை தாங்கும் என்னை ஒரு மதவாதியாக, ஒரு இனவாதியாக காட்டி குற்றம் சாட்டி என்னை தண்டிப்பதற்கு கூட சிறையில் கொண்டுபோய் தள்ளுவதற்கு கூட சதி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் ஒரு முக்கியமான ஒரு இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.

இந்த தேர்தலில் முஸ்லிம் சமுதாயம் எவ்வாறான ஒரு முடிவை எடுக்கப்போகின்றது என்பதை ஜனாதிபதி பார்த்துக்கொண்டிருக்கின்றார். இந்த நாட்டில் அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கின்ற ஜனாதிபதியை நாம் ஆதரிக்க வேண்டும்.

கடந்த முப்பது வருடங்களாக பிரபாகரனினால்  செய்யமுடியாமல் போனவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து அமெரிக்காவின் உதவியுடன் செய்வதற்கு சதி செய்தி கொண்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதியை குற்றவாளிக் கூண்டிலும் ஏற்றுவதற்கு இவர்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். பிரிந்திருக்கின்ற வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்காக இவ்விரண்டு கட்சிகளும் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒன்றை பேசுகின்றார். தவிசாளர் ஒன்றை பேசுகின்றார். செயலாளர் ஒன்றை பேசுகின்றார்.

52 அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் பள்ளிவாயல் உடைப்புக்கெதிராக நான் துனிந்து நின்று ஜனாதிபதி முன்னிலையில் அவற்றை எதிர்த்தபோது இந்த றவூப் ஹக்கீம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.

ஆனால், இங்கு வந்து வெற்றிலைக்கு வாக்கையளிப்பது பள்ளிவாயலை உடைப்பதற்கு அளிக்கப்படும் வாக்கு என பேசுகின்றனர்.

சிங்கள பௌத்த மதத்தலைவர்களை பற்றி பேசிய றவூப் ஹக்கீம் சிங்கள முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார். எந்த நேரத்திலும் இவ்வாறான ஒரு கலவரம் வந்துவிடுமோ என்று பயந்து போய் கவலையோடு இருந்தேன்' என்றார்.

  Comments - 0

  • Mohamed Wednesday, 22 August 2012 11:13 AM

    அப்போ எதற்காக ஹக்கிமை ஜனாதிபதி ஜெனிவாவுக்கு அனுப்பினார்.

    Reply : 0       0

    MUHAMMAD Wednesday, 22 August 2012 03:27 PM

    தம்பி முஹம்மட்,
    இக்கேள்வியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கும்.

    Reply : 0       0

    ACM Wednesday, 22 August 2012 03:41 PM

    ஐயா பசீா் அவா்கள் வெற்றிலைக்கு வாக்குப்போட சொன்னார்களா ? அல்லது வெற்றிலைக்கு போடுகின்றவா்கள் அலிசாகிர் அவா்களுக்கும் ஒரு விருப்பை வழங்குங்கள் என்றுதானே சொன்னார். நிலமை இவ்வாறு இருக்க ஏன் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகின்றீா்கள்.

    Reply : 0       0

    ML Gafoor Wednesday, 22 August 2012 04:17 PM

    பசீா் அவா்கள் எவ்வாறு பேசினார் என்று ஒரு தடவை மீள பாருங்கள்.

    Reply : 0       0

    Jazzy Wednesday, 22 August 2012 05:36 PM

    பள்ளிவாயல்கள் உடைபட்டன என்பதை ஏற்றுக்கொள்கின்ற வகையில் ரிஷாட்டை பாராட்டவேண்டும். அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கும் மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளைப்போல், பள்ளிவாயல்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றோ அல்லது நடப்பது சகஜம் என்றோ பேசவில்லை. ஆனால் வடமாகாண முஸ்லிம்களுக்கான நீதியினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கமே தடையாக இருக்கின்றது என்ற உண்மையை மறைத்து, பழியை வேறொருவர் மீது போடுகிறார் தனது சொந்த அரசியல் இலாபத்திற்காக. அதாவது தன்னைக்காத்துக்கொள்ள இன்னொரு முஸ்லிமைக் காட்டிக் கொடுக்கின்றார்.

    Reply : 0       0

    mishra Wednesday, 22 August 2012 07:21 PM

    இவர் எப்போது திருந்துவாரோ தெரியாது. இவரைஉம் தலைவராக ஏற்றுக்கொள்ள ஒரு கூட்டம். எமது தலைவிதி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .