2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பெண்களுக்கான வாழ்வாதார கடனுதவிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு காவியா நிறுவனம் யு.என்.டி.பி.நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான வாழ்வாதார கடனுதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காவியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் யு.என்.டி.பி. நிறுவனத்தின் தலைமை அதிகாரி வி.ரி.யோகராசா, ஐ.எல்.ஓ. நிறுவனத்தின் இணைப்பாளர் பி.சிவப்பிரகாசம் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் முகாமையாளர் எஸ்.குகதாஸ் உட்பட வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 12 பேருக்கான வாழ்வாதார கடனுதவிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பு காவியா நிறுவனம் பெண்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .