2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கான தேர்வடத்தை ஒப்படைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்காக கன்னன்குடாவில் திரிக்கப்பட்ட தேர்வடம் நாளை வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

300 கிலோ எடையையும்  சுமார் 70 அடி நீளத்தையும் கொண்ட இந்த தேர்வடத்தை கன்னன்குடா மக்கள் தோளில் சுமந்துசென்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் ஒப்படைக்கவுள்ளதாக கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். 

கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் பிள்ளையார் தேர், சித்திரத் தேர் என இரு தேர்கள் இழுக்கப்படுகின்றன. இந்த ஆலயத்திற்கான தேர்வடம் மற்றும் தேர்ச்சில்லு  காலம்காலமாக மரபு ரீதியாக கன்னன்குடாவில் செய்யப்படுவதுடன், தேர்ச்சில்லு பொருத்துவதற்கான அச்சும் கன்னன்குடா மக்களே செய்துவருகின்றனர். 

இறுதியாக 1976ஆம் ஆண்டு தேர்வடமும் 1999ஆம் ஆண்டு தேர்ச்சில்லும் தேர் அச்சும் கன்னன்குடாவில் செய்து இந்த ஆலயத்திற்கு
வழங்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .