2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மினிசூறாவளியினால் பாதிப்படைந்த வீடுகளை சீரமைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கம் சிரமதானம்

Super User   / 2012 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


அண்மையில் போரதீவுப் பற்று பிரிவில்  மினி சூறாவெளியினால் பதிப்படைந்த வீடுகளை சிரமதானம் மூலம் சீர்செய்து கொடுக்கும் பணியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்ளப்பு கிளை போரதீவுப்பற்று  தொண்டர்களுடாக நேற்று முன்னெடுத்திருந்தது.

இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரிவில் அமைந்துள்ள பலாச்சோலை, ஆனைகட்டியவெளி, போன்ற பகுதியில் மினி சூறாவெளியினால் பாதிப்படைந்த வீடுகளை திருத்தியும் முறிந்த மரங்கள் போன்றவற்றை அகற்றி சிரமதானப்பணியில் செஞ்சிலுவைத் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இப்பணியில் தன்னலம் கருதாது சேவையிலீடுபட்ட தொடண்டர்களுக்கும் செஞ்சிலுவை அமைப்பின் மட்டக்களப்பு கிளையினருக்கும் தாம் மிகுந்த நன்றியினைத் தெரிவிப்பதாக இப்பகுதி மக்களும் பொரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் கூறினார்.

அத்துடன் மனிசூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் இன்று சனிக்கிழமை  கூரைகளுக்கான படங்குகள் வழங்கப்பட்டன.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .