2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீல.மு.கா ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து முஸ்லிம் சமூகத்தை விற்க தலைமை முயல்கிறது: பைஸர் முஸ்தபா

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இன்றைய தலைமை பணத்திற்காகவும் பதவிக்காகவும் முஸ்லிம் சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டது' என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறினார்.

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நேற்ற திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த பெருந்தலைவர் அஸ்ரப் எனது தந்தையுடன் மிகவும் நெருக்கமானவர். அவர் கட்சியை ஆரம்பித்து சமூகத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் வழங்கள், உட்கட்டமைப்பு, அபிவிருத்தியென்று பல அபிவிருத்திகளை செய்தார். ஆனால் இன்றையத் தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் கட்சியில் இருந்த சமூக சிந்தனையாளர்களை வெளியேற்றினார். அது இன்றும் தொடர்கின்றது.

சமூகத்தை விற்று அரசியல் செய்வது தவறாகும். சமூகத்தின் நலனுக்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் வேண்டித்தான் அரசியல் செய்ய வேண்டுமே தவிர சமூகத்தை விற்று நம்மை வளர்ப்பதற்காக அரசியல் செய்வது தவறாகும்' என்று  கூறினார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உரையாற்றுகையில்,

'இன்று பள்ளிவாயலை உடைக்கின்றார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்கின்றார்கள். இந்த நாட்டில் பள்ளிவாயல்களை உடைத்தது புலிகள்தான் என்று அவர்களுக்குத் தெரியாதா?

வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் அப் பகுதியில் புலிப் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் எத்தனையென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குத் தெரியுமா?

அரசாங்கம் பள்ளிவாயல்களை உடைக்கின்றது என்று கூறுபவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கம் நல்லம் என்றும் கிழக்கு மாகாணத்திற்கு வந்து அரசாங்கம் கூடாது என்றும் பொய் சொல்வதைப் பார்க்கும் போது கவலையாகவுள்ளது.

முஸ்லிம் காங்கரஸ் தலைமை இன்று ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிடுகின்றது.

கிழக்கு மாகாணத்திற்கு வந்து சிங்களவர்கள் பள்ளி வாயல்களை உடைக்கின்றனர் சிங்களவர்களைப் போன்ற மோசமானவர்கள் இல்லை என்று கூறிவிட்டு அநுராதபுரத்தில் விகாரைக்குப் பக்கத்தில் கூட்டம் நடாத்தும் போது சிங்கள மக்களைப் போன்ற நல்லவர்கள் கிடையாது என்று கூறி முஸ்லிம்கள் வெத்திலைக்கு வாக்களிக்குமாறும் கூறுகின்றனர்.

அநுராதபுரத்தில் வெற்றிலை நல்லம் என்றால் அது எப்படி கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் கெட்டதாகி போகும் என்று முஸ்லிம் காங்கரஸ் காரர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்' என்று அவர் கூறினார்.


  Comments - 0

  • Maruthooraan Tuesday, 28 August 2012 09:57 AM

    புலிகள் பள்ளிவாசலை உடைக்கும்போது அஸ்வர் ஹாஜி யானையின் வாசலில் தான் தொங்கியதை மறந்து விட்டாரா?

    Reply : 0       0

    கிழக்கன் Tuesday, 28 August 2012 06:01 PM

    மு.கா. ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து பயணிப்பது இருக்கட்டும், நீங்கள் மனிதனாகப் படைக்கப்பட்ட நோக்கத்தை நோக்கிப் பயணிக்கின்றீகளா?
    மேடைக்கு மேடை, ஆளுக்கு ஆள் ஏன் மு.கா, மு.கா, ஹகீம், ஹகீம், அஷ்ரப், அஷ்ரப் என்று கூப்பாடு போடுகின்றீர்கள்? தேர்தலில் களம் இறங்கினால் உங்களைப் பற்றி மக்களுக்குச் சொல்லுங்கள். அதைவிடுத்து நித்திரையில் பேய்க் கனவு கண்டு அரண்டவன் மாதிரி எல்லோரும் கிலி பிடித்துப் பிதற்றுகின்றீர்கள்.
    உங்களுக்கு மு.கா. என்றால் என்றால் என்ன அவ்வளவு பயமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .