2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மட்டு. வைத்தியசாலை குளியலறையில் இஸ்லாமிய சின்னங்களைக் கொண்ட தரையோடுகள் பொருத்தப்பட்டுள்ளமை குறித்து

Super User   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                      (கெலும் பண்டார)

மட்டக்களப்புபோதனா  வைத்தியசாலையின் குளியலறைகள் பலவற்றில் இஸ்லாமிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட தரையோடுகள் பொருத்தப்பட்டமை குறித்து அப்பிரதேச முஸ்லம்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டகளப்பிலுள்ள இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி சங்கத்தின் தலைவரான மொஹமட் கலீல் இது தொடர்பாக டெய்லி மிரரிடம் கூறுகையில், 'அல்லா பிஸ்மி' என அரபு எழுத்துக்களில் எழுதப்பட்ட சமய சின்னங்களைக்கொண்ட தரையோடுக் காணப்பட்டதாக தெரிவித்தார்.

"இவ்விடயம் குறித்து நாம் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.  சீன ஒப்பந்தக்காரர் ஒருவர் இந்த தரையோடுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது. எவரும் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. பின்னர் நாம் இந்த தரையோடுகளை அகற்றுவதற்காக 1000 தரையோடுகளை வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்ய தீர்மானித்தோம்" என்றார்.  இவர் பிலால் ஹாஜியார் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுவர் ஆவார்.

இது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. முருகானந்தனிடம் டெய்லி மிரர் கேட்டபோது, இத்தரையோடுகள் 7 வருடங்களுக்கு மேல் அங்கிருந்தாக தெரிவித்தார்.

"நான் இங்கு ஐந்து வருடங்களாக உள்ளேன். இந்தகுளியலறைகள் நான் இங்கு வருவதற்கு முன்பே நிர்மாணிக்கப்பட்டவை. அதாவது, இத்தரையோடுகள் குறைந்தபட்சம் 7-8 ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டும். முஸ்லிம் மதகுரு ஒருவர் இவ்விடயத்தை எமது கவனத்துக்கு கொண்டுவந்தார். அவற்றை அகற்றுவதற்கு நாம் தயாரென தெரிவித்துள்ளோம். ஆனால் அவற்றை ஒரே இரவில் செய்ய முடியாது" என அவர்கூறினர்.

இச்சின்னங்களை சிலர் தரையோடு டிஸைன்களாக தவறாக கருதியிருக்கக்கூடும். எவரினதும் சமய உணர்வுகளுக்கு பங்கம் விளைவிக்கும் நோக்குடன் செய்யப்பட்டதல்ல' என அவர் கூறினார்.



  Comments - 0

  • nallavan Thursday, 30 August 2012 01:38 AM

    ரொம்ப நல்ல விடயம் கலீல் ஹாஜி........... அல்லாஹ் உங்களுக்கு நன்மையை தருவானாக......... இந்த நல்ல பல செயல்கள் எல்லாம். உங்களின் அரசியல் பிரவேசத்தாலும் மேடைப் பேச்சுக்களாலும் நாறிக் கொன்டிருக்கிறதே ஹாஜி.......

    Reply : 0       0

    Aranejjan Thursday, 30 August 2012 02:23 AM

    எப்படியென்டாலும் வைத்தியசாலை நிருவாகமே அது பெரிய பிரச்சினையாவதுக்குள்ள அன்பளிப்புச்செய்த தரையோடுகளை வைத்து சீக்கிரம் மாத்திருங்கப்பா.

    Reply : 0       0

    rilwan Thursday, 30 August 2012 07:31 AM

    டாக்டர் கே. முருகானந்த் அவர்களே முஸ்லிம்களின் உணர்வைப்புரிந்து கொண்டமைக்கும் அதனை மாற்றுவதுக்கு அனுமதித்ததுக்கும் நன்றி நன்றி அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக ஆமீன்.

    Reply : 0       0

    uvais.m.s Thursday, 30 August 2012 08:39 AM

    இப்பவாவது அகற்றும் எண்ணம வந்ததே உடனே செய்யுங்கள்.

    Reply : 0       0

    saleem,m.a. Thursday, 30 August 2012 11:31 AM

    இப்பவாவது அகற்றும் எண்ணம் வந்ததே உடனே செய்யுங்கள்.

    Reply : 0       0

    IBNU ABOO Thursday, 30 August 2012 02:02 PM

    டாக்டர் முருகானந்தம் அவர்களின் மதங்களை மதிக்கும் அவரது உயர்ந்த பண்பை அவர் இந்த விடயத்தில் நடந்து கொன்ட விதத்தில் உணர்கிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .