2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

படகு கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமுத்திரபுரம் கடற்கரையிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை மீன்பிடிப்பதற்காகச் சென்ற இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சூரையடி கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விமலசிறி விமலசேன  (வயது 39) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்டோர் குறித்த இடத்திற்குச் சென்றனர்.

இதேவேளை, இப்படகில் சென்ற ஒருவர் பாதுகாப்பாக கரைசேர்ந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .