2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

இனந்தெரியாத ஆயுததாரிகளினால் செங்கலடியில் வர்த்தக நிலையம் தீ வைப்பு; ஒருவர் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு - ஏறாவூர்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஆண்டான்குள வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கருப்பு வான் ஒன்றில் வந்தவர்களால வர்த்தக நிலையம் ஒன்று தீ வைக்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தமது கடைக்குள் வந்த ஏழு தொடர்க்கம் 8 பேர் வரையானோர் கடைக்குள் பெற்றோல் ஊற்றி எரித்து விட்டு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவையும் உடைத்துவிட்;டுத் தப்பிச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதும் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செங்கலடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .