2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

குருமண்வெளி பிரதேசத்தில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (ஜதுசன்)
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளி பிரதேசத்தில் குளத்தின் அருகிலிருந்து ஆணொருவரின் சடலத்தை நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சண்முகம் கிருஸ்ணபிள்ளை (50வயது) என்பவரது சடலமே  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .