2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

146ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டு. மாவட்ட பொலிஸ் நிலையங்களில் விசேட நிகழ்வுகள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்,
ஸரீபா)

146வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை, தேசியக்கொடி, பொலிஸ் படைக் கொடி என்பன ஏற்றப்பட்டன.இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த விஜயசிறி  கலந்துகொண்டார்.

இதேவேளை, 146ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இன்று விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.வி.சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அன்னதான நிகழ்வு இடம் பெற்றதுடன் பேத்தாளை விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள் 50 பேருக்கு பாசிக்குடா கடற்கரையில் நீச்சல் பயிற்சியும் வழங்கப்பட்டது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .