2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தேர்தல் பிரசாரங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மட்டக்களப்பு விஜயம்

Super User   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு பிரசார நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களின் நாளைய அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

கல்குடா தொகுதியின் ஓட்டமாவடி பாலத்தடியில் இருந்து பிரதான வீதியினூடாக மாவடிச்சேனை மற்றும் வாழைச்சேனை வரை நடை பவணியாக சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இதன்போது, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டதுடன் பெண்கள் வீதியோரங்களில் நின்று குரவை விட்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

இப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் முன்னாள் சுகாதார பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஸ், வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .