2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

'மறைந்த தலைவர் சமூக நலனுக்காக வளர்த்த மரம் பணத்திற்காக நஞ்சூட்டுகின்ற மரமாக மாறியுள்ளதைக் கண்டு கவ

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மறைந்த தலைவர் தியாகத்துடன் சமூக நலனுக்காக வளர்த்த மரம் இன்று பணத்திற்காக சமூகத்திற்கு நஞ்சூட்டுகின்ற மரமாக மாறியுள்ள நிலையைப் பார்த்து கவலையடைகிறேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இரவு இறுதி பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மறைந்த தலைவர் அஸ்ரபினால் சமூகத்தின் நலனைக் கருத்திற் கொண்டு அவரது தியாகத்தில் வளர்த்த கட்சி இன்று வெளிநாட்டு நாணயங்களுக்காக சோரம் போயுள்ளதை நினைக்கும்போது மிகவும் கவலையாகவுள்ளது. மறைந்த தலைவர் சமூகத்தின் அனைத்துத் தேவைகளையும் தேடித் தேடிச் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் தியாகத்துடன் செயற்பட்டார். ஆனால் அந்தத் தலைவரிடம் காணப்பட்ட சமூகத்தின் மீதான கவலையில் ஒரு துளியேனும் இன்றைய தலைவரிடம் இல்லை. இவருக்குத் தேவையானதெல்லாம் வெளிநாட்டு நாணயங்கள் மாத்திரம்தான்' என்றார்.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், முன்னாள் பிரதி அமைச்சர் சுரேஸ் வடிவேல், வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .