2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் தேசிய அறுவடை விழா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய பயிர் உற்பத்தி திட்டத்தின் முதலாவது தேசிய அறுவடை விழா மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பழுகாமத்தில் நேற்று புதன்கிழமை பகல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஹரிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.சார்ள்ஸ், விவசாய திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.எஸ்.ஹுசைன், பிரதி மாகாண பணிப்பாளர் குகநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கமநல திணைக்கள உதவி பணிப்பாளர் ருசாங்கன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் மறுவயல் உற்பத்தி பொருட்களான சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற உப உணவுப் பயிர்களின் வெளிநாட்டு இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்ட படுவான்கரை பிரதேச மக்களின் நன்மை கருதி இது தொடர்பிலான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் எதிர்காலத்தில் விவசாய அறுவடைக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த உப உணவு பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஹரிகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய பயிர் உற்பத்தி திட்டம் பூரண வெற்றியடைந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த திட்டம் பாரிய பொருளாதார வளத்தை மாவட்டத்தில் ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .