2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பொண்டுகள்சேனை பாலம் திறப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொண்டுகள்சேனை பாலம் இன்று வியாழக்கிழமை மாலை மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நீர்பாபசனத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுள் பொண்டுகள்சேனையும் ஒன்றாகும். அத்துடன் வெள்ள காலத்தில் போக்குவரத்து மிக மோசமாகப் பாதிக்கப்படும் ஒரு பிரதேசம். இப்பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் வெள்ள காலத்தில் துண்டிக்கப்படும் ஓட்டமாவடிக்கிடையிலான போக்குவரத்து மற்றும் ஏனைய போக்குவரத்தும் சீராகின்றது.

இந்தப்பாலம் ஒரு கோடியே 80 லஇட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .