2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஆரையம்பதியில் இரு சிறுமியர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு

Super User   / 2012 செப்டெம்பர் 26 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கோயில்குளத்தில் பாடசாலை சிறுமிகள் இருவர் இன்று புதன்கிழமை பிற்பகல்  கடத்தி செல்லப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மற்றும் ஏழு வயது நிரம்பிய இந்த சிறுமிகள் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், மேற்படி சிறுமிகளில் ஒருவர் தாழங்குடா கடற்கரையிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறுமியை பொலிஸார் தேடி வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .