2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மண்முனைதுறைப் பகுதியில் ஆட்லறிக் குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைதுறைப் பகுதியில் வெடிக்காமல் காணப்பட்ட ஆட்லறிக் குண்டொன்று நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்முனைப்பால  நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு;ள்ள சிலர் ஆட்லறிக் குண்டை கண்ட நிலையில்,  காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸாரும் குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட படையினரும்  இக்குண்டை மீட்டனர்.

இக்குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .