2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு உதவிக் கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் கடந்த வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சமூகசேவை அமைச்சினால் உதவிக் கொடுப்பனவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை  வழங்கப்பட்டன.

தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கு 10,000 ரூபா படி 16 குடும்பங்களுக்கு இவ்வுதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைரின் ஏற்பாட்டில் இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

ஏறாவூர் பிரதேச செயலாளர் எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .