2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காத்தான்குடி கரையொதுங்கியுள்ள மீன்களை உண்ண முடியும்: மட்டு. மாவட்ட கடற்றொழில் திணைக்களம்

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

காத்தான்குடி கடற்கரையில் இன்று காலை தொடக்கம் கரையொதுங்கியுள்ள மீன்களை உண்ண முடியும் என கடற்றொழில் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.

கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் காலநிலை மாற்றத்தினாலுமே இந்த மீன்கள் கரையொதுங்கி வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.

இந்த மீன்களை உண்ண முடியும் எனவும் காத்தான்குடி கடற்கரைக்கு சென்று கரையொதுங்கும் மீன்களை தான் பார்வையிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுமார் 2 தொன் மீன்கள் காத்தான்குடி கடற்கரையில் கரையோதுங்கி உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .