2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அமெரிக்க தூதுவர் மட்டு. விஜயம்

Super User   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,
ஜவீந்திரா)

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 15ஆம் விடுதியில் செயற்பட்டும் வலது குறைந்தோருக்கான சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார். இந்த நிலையத்தில் வலது குறைந்தோரில் கால்களை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் செயற்கை கால்கள்; பொருத்தும் நடவடிக்கையினை அமெரிக்க தூதுவா பார்வையிட்டார்.

இதன் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தனுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதிகள் சிலவற்றையும் தூதுவர் பார்வையிட்டார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயதம் செய்த புதிய அமெரிக்க தூதுவர் ஒல்லாந்தர் கோட்டையையும் பார்வையிட்டார். மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை ஆகிய தினங்களில் தங்கியுள்ள அமெரிக்க தூதுவர், பிரதிநிதிகள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

இதேவேளை, படுவான்கரை பகுதியில் கடந்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட இரண்டு பாடசாலைகளுக்குரிய புதிய கட்டிட நிர்மாணங்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் இன்று திறந்து வைத்தார்.

யூஎஸ்எயிட்  நிறுவனத்தின் ஊடாக புதிகாத நிர்மாணிக்கப்பட்ட முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம், களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் விதியாலயம் ஆகிய பாடசாலைக் கட்டடிடங்களை அமெரிக்க தூதுவர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலய பிரதிநிதிகள் மற்றும் யூஎஸ்எயிட் நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்துகொணடனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .