2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நுகர்வோர் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்வது தொடர்பான கூட்டம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித)


இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் நுகர்வோர் சங்கங்களை ஆரம்பிக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நுகர்வோர் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்யும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழவின் தலைவர் கோசல விக்ரமநாயக்க, அதன் உதவிப் பணிப்பாளர் காமினி ஹேரத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 'இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் மின்சாரம் சார்ந்த கைத்தொழில் ஒழுங்கு முறையும்',  'மின்சாரத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு', 'மின்சார விநியோகம் தொடர்பான நுகர்வோர் முறைப்பாடுகளைத் தீர்க்கும் நடைமுறையும் பிணக்குகளை தீர்த்தலும்' எனும் தலைப்புக்களில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம் பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகளையும் இதன்போது ஆணைக்குழு அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நுகர்வோர் சங்கமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .