2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் நடமாடும் சேவை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 27 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் நடமாடும் சேவை, மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையில் பொலிஸ் பதிவு, வைத்திய முகாம் மற்றும் அடையாள அட்டை பெற்றுக் கொடுத்தல் போன்ற சேவைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் நூற்றுக் கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி விவேகானந்தன் (விவேக்) கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். இந்நடமாடும் சேவையானது இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .