2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான வேதாகம போட்டிப் பரீட்சை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                     (எம்.சுக்ரி)
கல்விசார் கிறிஸ்த்தவ அமைப்பு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடையில் நான்காவது வருடமாக நடாத்தும் வேதாகம போட்டிப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு , திகோணமலை, கல்முனை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பரீட்சை நிலையங்களிலும், திருகோணமலை மாவட்டத்தில் 5 பரீட்சை நிலையங்களிலும் கல்முனையில் ஒரு பரீட்சை நிலையத்திலும் இப் பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

இப்பரீட்சைக்கான அனுமதி பட்டியல் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாணவர்கள் அதிபர்களிடத்தில் சுற்றிலக்கத்தை பெற்றுக்கொண்டு பரீட்சைக்கு உரிய நேரத்தில் தோற்ற வேண்டுமென கல்விசார் கிறிஸ்த்தவ அமைப்பின் காப்பாளார் எம்.டேவிட் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .