2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை, விநாயகபுரம் பேச்சியம்மன் வீதியை சேர்ந்த 24 வயதான சாமித்தம்பி கிருபாகரன் என்பவரே உயிரிழந்தவராவார்.

வாழைச்சேனையில் இருந்து பாசிக்குடா நோக்கி வந்த டிப்பர் வாகனமும் பாசிக்குடா பகுதியில் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த மோட்டார் சைக்கிலும் இன்று காலை 11 மணியளவில் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .