2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

றிஸ்வி நகர் கடற்கரைப் பகுதி காணியில் குப்பைகள் கொட்டப்படுவது இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி றிஸ்வி நகர் கடற்கரைப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் குப்பைகள் கொட்டுவதை காத்தான்குடி நகரசபை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக காத்தான்குடி நகரசபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபைப்  பிரிவில் திண்மக்கழிவு அகற்றல் தொடர்பில் அரசாங்க காணி ஒன்று இல்லாததால் குப்பைகளைக் கொட்டுவதில் பாரிய சிரமங்களை காத்தான்குடி நகரசபை எதிர்நோக்கிவந்தது. இந்த நிலையில், காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவ வேலைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இந்த வேலைகள் நிறைவடையும்வரை காத்தான்குடி றிஸ்வி நகர்  கடற்கரைப் பகுதியில் உள்ள  காணி ஒன்றில் குப்பைகளை காத்தான்குடி நகரசபை கொட்டி வந்தது.

இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த றிஸ்வி நகர் மக்கள், இது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் எனக் கூறி குப்பைகள் கொட்டுவதை காத்தான்குடி நகரசபை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி கடந்த 3ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
இதனை அடுத்து இந்த குப்பை கொட்டிய பகுதி மூடப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் அஸ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .